Telangana | ராகுல் காந்தியின் போஸ்டருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாலாபிஷேகம் நடத்தினார்கள்.
Telangana | ராகுல் காந்தியின் போஸ்டருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாலாபிஷேகம் நடத்தினார்கள்.
Published on: November 7, 2024 at 9:27 am
Telangana | தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் அனில் குமார் யாதவ், மற்ற கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து ஐதராபாத்தில் ராகுல் காந்தியின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் நடத்தினார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதியான தெலங்கானா அரசின் விரிவான சமூக-பொருளாதார, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் ஜாதி கணக்கெடுப்பு புதன்கிழமை (நவ.6,2024) தொடங்கியது.
அப்போது, தெலங்கானா முதலமைச்சர் ஏ ரேவந்த் ரெட்டி, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான சமூக நீதி மற்றும் சம வாய்ப்புகளை அடைவதற்கான ஒரு யாகம் என ஜாதிவாரி கணக்கெடுப்பை விவரித்தார்.
மேலும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ரேவந்த், “தெலங்கானா மண்ணில் தொடங்கிய மாபெரும் முயற்சி, ராகுல் காந்தியின் தலைமையில் நாட்டின் சமூகக் கண்ணோட்டத்தை மாற்றும் ஒரு “சாகசம்” என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், இந்தப் பணிக்கு மாநிலம் முழுவதும் 94,750 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 9,478 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா தெரிவித்தார்.
இதையும் படிங்க : ரூ.3 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி; மகளிருக்கு இலவச பேருந்து: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com