வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம்

RMC Chennai | தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 27, 2024 at 9:02 am

RMC Chennai | தென்தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

27.10.2024 முதல் 30.10.2024

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31.10.2024 முதல் 01.11.2024 வரை

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னைியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு 30 ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க சென்னை – திருநெல்வேலி தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு ரயில் ; தென்னக ரயில்வே அறிவிப்பு

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு!
Anbumani Ramadoss

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன்

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்
TTV Dinakaran

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com