How to Prepare for a Marathon | மாரத்தான் போட்டிககளில் கலந்துகொள்ள உடலை இப்படி தயார்படுத்துங்க!
How to Prepare for a Marathon | மாரத்தான் போட்டிககளில் கலந்துகொள்ள உடலை இப்படி தயார்படுத்துங்க!
Published on: October 26, 2024 at 6:48 pm
How to Prepare for a Marathon | நகர்புறங்களில் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழித்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் போட்டிகள் நடத்தபடுகிறது. உலக ஒற்றுமை தினம் போன்றவற்றை கருத்தில் கொண்டும், உள்ளூர் மற்றும் மாநிலங்கள் அளவிலான மரத்தான் போட்டிகள் நடத்துவது உண்டு. இது போன்ற மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
உடல்நிலை மதிப்பீடு
மாரத்தான் போட்டியில் ஈடுபடுவதற்கான பயிற்சியை தொடங்கும் முன்னர் உடல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியம். நீண்ட நாட்களாக எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்திருந்தால் பயிற்சியினை தொடங்கும் முன்னர் பயிற்சி செய்வதற்கு தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பயிற்சியை படிப்படியாக மேம்படுத்துதல்
பயிற்சியை தொடங்கிய பின்னர் படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். இந்த மெதுவான பயிற்சி முறை உடலை நீண்ட தூரத்திற்கு களைப்படையாமல் இருக்க செய்கிறது. சமநிலையான பயிற்சிக்காக ஓய்வு நாள்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உடற்தகுதிக்கான பயிற்சி
தினமும் பயிற்சி செய்வதால் சலிப்பு ஏற்படாமல் இருக்கவும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும், சோர்வைத் தடுக்கவும், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சி மேற்கோள்ள வேண்டும். இது தசையை வலுப்படுத்தும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தும், இதனால் நீங்கள் சிறந்த விளையாட்டு வீரராக உதவுகிறது.
வார்ம்-அப் செய்தல்
பயிற்சிக்கு தயாராகும் முன்னர் உங்கள் இரத்த ஓட்டம் மற்றும் தசைகளை செயலுக்குத் தயார்படுத்துவதற்கு டைனமிக் ஸ்ட்ரெச்கள் மற்றும் எளிதான ஜாகிங் போன்ற வார்ம்-அப் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நேர்மறை எண்ணங்களை உருவாக்குதல்
நீண்ட தூரம் ஓடுவது உடல் ரீதியாக ஒரு சவாலாக இருக்கும். உங்கள் பயிற்சியின் போது நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நுட்பங்கள் மராத்தானின் போது கடினமான தருணங்களை கடக்க உதவுகிறது. இந்த குறிப்புகளை மனதில் வைத்து செயல்படும்போது வெற்றிகரமான மராத்தான் அனுபவத்திற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க : கெட்ட கொழுப்பு வந்த வேகத்தில் குறையும்; இஞ்சியை இப்படி யூஸ் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com