Tirupathi | 60 வயதை கடந்த மூத்தக் குடிமக்கள் திருப்பதிக்கு பாத யாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tirupathi | 60 வயதை கடந்த மூத்தக் குடிமக்கள் திருப்பதிக்கு பாத யாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Published on: October 26, 2024 at 6:03 pm
Tirupathi | திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது:
60 வயதிற்கும் மேல் உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மற்றும் மூட்டுவலி உள்ளவர்கள் மலை ஏறவேண்டாம். திருப்பதி ஏழுமலையான் கோயில் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளதால், ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் இதய நோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
உடல்பருமன் அல்லது இதய அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மலை ஏறுவதிலிருந்து முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் பயணத்தின் போது தேவையான மருந்துகளை உடன் கொண்டுச் செல்ல வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பக்தர்கள், கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் 1500-வது படிக்கட்டு, கலிகோபுரம் மற்றும் பாஸ்கர்ல சந்நிதி இடங்களில் தேவஸ்தானத்தின் மருத்துவக் குழுக்களை அணுகலாம்.
திருமலையில் 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை வழங்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீரிழிவு மற்றும் கிட்னி தொடர்பான தொந்தர்வங்களுக்கு தேவையான சிகிச்சைகளும் வழங்கப்படும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com