Nimrat Kaur | அபிஷேக் பச்சன் உடனான டேட்டிங் வதந்திகளுக்கு நடிகை நிர்மத் கவுர் பதிலளித்துள்ளார்.
Nimrat Kaur | அபிஷேக் பச்சன் உடனான டேட்டிங் வதந்திகளுக்கு நடிகை நிர்மத் கவுர் பதிலளித்துள்ளார்.
Published on: October 26, 2024 at 2:51 pm
Nimrat Kaur | நடிகர் அபிஷேக் பச்சன் உடன் நடிகை நிர்மத் கவுர் டேட்டிங்கில் இருப்பதாக வதந்திகள் வெளியாகின. இந்த வதந்திகள், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து பற்றிய வதந்திகளை சமூக வலைதளத்தில் மீண்டும் தூண்டியது.
இந்த நிலையில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை நிர்மத் கவுர், “என்னால் எதையும் செய்ய முடியும், மக்கள் இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். இதுபோன்ற வதந்திகளை நிறுத்த முடியாது, மேலும் எனது வேலையில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்றார். நிம்ரத் மற்றும் அபிஷேக் பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய சில மணி நேரங்களிலே அது வைரலானது.
முன்னதாக நடிகர் அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் திருமணம் தொடர்பான பேச்சு ஒன்று வெளியானது. நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அபிஷேக் தனது திருமணத்தை குறிப்பிட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பார். இதற்கு குறுக்கிட்டு பதிலளித்த நிர்மத் கவுர், “திருமணங்கள் நீண்ட காலம் நீடிக்காது’ என்று சொல்லி சிரித்தார். இதற்கு, அபிஷேக் பச்சன் அவளுக்கு ‘நன்றி’ என்று கூறிவிட்டு இருவரும் சிரித்தார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா ராய் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com