Bloody Beggar Trailer | கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Bloody Beggar Trailer | கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Published on: October 18, 2024 at 9:25 pm
Bloody Beggar Trailer | சிவபாலன் முத்துக்குமார் எழுத்து இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் “ப்ளடி பெக்கர்“. இந்தப் படத்தில் கவின் பிச்சைக்காரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
இந்த டிரெய்லரில், பிச்சைக்காரனான கவின் ஒரு அழகான பங்களாவிற்குள் நுழைந்து, பணக்காரர்களிடையே பிரச்சனையில் சிக்கிக் கொள்வது போல் உள்ளது. ரெடின் கிங்கஸ்லியும் படத்தில் உள்ளார். படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடங்குகிறார்.
ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். சிவகார்த்திகேயனின் “அமரன்” மற்றும் ஜெயம் ரவியின் “பிரதர்“ படங்களுடன் இந்த படம் தீபாவளி தினத்தன்று( அக் .31) திரைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க விஜய் படத்தில் கேரளத்து பைங்கிளி; மமிதா பைஜூ புகைப்படங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com