மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

Baba siddique murder | மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

Published on: October 13, 2024 at 4:08 pm

Baba siddique murder | என்சிபி தலைவர் பாபா சித்திக்(66) நேற்று இரவு மும்பையின் பாந்த்ரா பகுதியின் கிழக்கில் உள்ள அவரது மகன் ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். என்.சி.பி. தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் அளித்த தகவலின்படி, மூன்று குற்றவாளிகள் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். மூவரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங், 23, மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப், 19, – மூன்றாவது நபர் உ.பி.யைச் சேர்ந்த சிவ குமார் கவுதம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வழிநடத்துபவராக நம்பப்படும் நான்காவது நபரும் தப்பியோடியுள்ளார்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு சமூக ஊடகங்களின் பதிவிட்டு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரபல பிஷ்னோய் கும்பலின் கூட்டாளியான ஷுபம் ராமேஷ்வர் ஷிபு லோங்கரின் ஃபேஸ்புக் கணக்குடன் இணைத்து பதிவிட்டுள்ளது.

முன்னான் அமைச்சர் சித்திக் கொலை தொடர்பான விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் இருவர், தரம்ராஜ் காஷ்யப் மற்றும் ஷிவ் குமார் கவுதம் உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் முன்பு புனேவில் தொழிலாளிகளாக பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

பஹ்ரைச் போலீஸ் சூப்பிரண்டு (SP) விருந்தா சுக்லா, தரம்ராஜ் கைது செய்யப்பட்டாலும், சிவக்குமார் தொடர்ந்து தப்பி ஓடவே முயற்சித்தார் என்றார். இருவருக்குமே சொந்த ஊரில் குற்றப்பதிவு இல்லை, ஆனால் அவர்கள் பஞ்சாப் சிறையில் இருந்த காலத்தில் உருவானதாகக் கூறப்படும் பிஷ்னோய் கும்பலுடன் புகழ் பெறுவதை நோக்கமாகக் கொண்டு பழக்கங்கள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்திற்கு உட்பட்டுள்ள நபர்கள் சித்திக்கை பல மாதங்களாக கண்காணித்து வந்துள்ளதாகவும், அவரது வீடு மற்றும் அலுவலகத்தை உளவு பார்த்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், தாக்குதலுக்காக சந்தேக நபர்களுக்கு தலா ரூ. 50,000 முன்பணமாக வழங்கப்பட்டதாகவும், படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் சித்திக் கொலைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக்கின் துயரமான மறைவு வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதரவாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும் குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜக மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று பாஜக கேட்டுக் கொண்டாலும், எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், “மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது” என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை: மனைவி கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com