Southern Railway | திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Southern Railway | திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Published on: October 12, 2024 at 8:44 pm
Southern Railway | தொடர் விழா நாட்களை முன்னிட்டு ரயில்களில் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண். 06003 திருநெல்வேலி – செங்கல்பட்டு வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து நாளை (அக்.13) அன்று மாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். ரயில் எண் 06004 செங்கல்பட்டு – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 2024 நாளை மறுநாள் (14 ஆம் தேதி) மாலை 3.45 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண். 06003/06004 திருநெல்வேலி – செங்கல்பட்டு – திருநெல்வேலி வாராந்திர ரயில் 1 ஏசி டூ டயர் கோச், 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 10 ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சுகள், 3 ஜெனரல் செகண்ட் கிளாஸ் கோச்சுகள் மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் கொண்டதாக இயக்கப்படும்.
இதையும் படிங்க : கவரப்பேட்டை விபத்து; புதுச்சேரி- திருப்பதி ரயில் ரத்து: பல்வேறு ரயில்கள் மாற்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com