Southern Railway | சென்னை கவரைப்பேட்டையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. மேலும், 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
சுமார் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரம்
- சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 16112 புதுச்சேரி – திருப்பதி ரத்து செய்யப்பட்டது.
- மாலை 4:35 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்ட ரயில் எண் 16203 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- சனிக்கிழமை பிற்பகல் 2:25 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16053 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- சனிக்கிழமை காலை 10:10 மணிக்கு புறப்பட்ட ரயில் எண் 16054 கொண்ட திருப்பதி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- மாலை 6:05 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16058 திருப்பதி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- பிற்பகல் 2:30 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16402 கடப்பா – அரக்கோணம் ரத்து செய்யப்பட்டது.
- கூடுதலாக, விஜயவாடா-சென்ட்ரல் வழித்தடத்தில் பினாகினி எக்ஸ்பிரஸ் இரு திசைகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மேலும், சூலூர்பேட்டை-நெல்லூர் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தாம்பரம்- கோயம்புத்தூர் சிறப்பு ரயில் அறிவிப்பு: புறப்படும் நேரம், இடம் செக் பண்ணுங்க!
- வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு.. வைகோ வெளியிட்ட அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு!
MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறுகிறது. கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், கூட்டணிக் கொள்கைகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
- மெர்சிடிஸ்-பென்ஸ் 2 லட்சம் என்ஜின்கள் இந்தியாவில் தயாரிப்பு.. புதிய சாதனை!
Force Motors Feat : ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவில் உள்ள சக்கான் ஆலையில் 2,00,000-வது மெர்சிடிஸ்-பென்ஸ் இன்ஜினை தயாரித்து முக்கிய உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. 1997 முதல் நீடித்து வரும் மெர்சிடிஸ்-பென்ஸ் கூட்டாண்மையின் வெற்றியை இந்த சாதனை பிரதிபலிக்கிறது.
- முதல் குழந்தையை எதிர்நோக்கும் சமந்தா.. கர்ப்பம் உறுதி!
Samantha : நடிகை சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன.
- 9.44 கோடி விவசாயிகள் பயன்.. பிஎம் கிஷான் நிதி ₹18,880 கோடியை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி!
PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வழங்கினார்.
- சென்னையில் பரிதாபம்.. கிரிக்கெட் விளையாடிய ஐ.டி ஊழியர் உயிரிழப்பு!
IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்