TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டுவது எப்போது?
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 21 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அவர்களின் நான்கு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை கண்டித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் 21 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – இலங்கை உறவுகளை மேம்படுத்தும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்ட நிலையில், 50 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க விமானப்படை சாகச நிகழ்ச்சி; அடிப்படை வசதிகள் கூட இல்லாத அலட்சியம்: டி.டி.வி கண்டனம்!
Anbumani Ramadoss: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை விவகாரத்தில், திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
Anbumani Ramadoss: “கடன் ரூ.9.55 லட்சம் கோடி, 2024 -25இல் வட்டி ரூ.62,456 கோடி: 4 ஆண்டாக கடன், வட்டியில் தமிழகம் முதலிடம்- திமுகவின் இன்னொரு சாதனை”…
TTV Dhinakaran: வாக்காளர் சிறப்பு திருத்த வரைவு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்…
Anbumani Ramadoss: தமிழகத்தில் வேளாண்துறை தொடர்ந்து இரண்டாம்
ஆண்டாக எதிர்மறை வளர்ச்சி; கொண்டாட்டம்
நடத்தும் மோசடி திமுக அரசின் பதில் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி…
DMK protest: மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை வெற்றி பெற செய்வீர் என அறிக்கை வெளியிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்