Kulasekarapattinam | குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு நடத்தினார்.
குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 03.10.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா வரும் 13.10.2024 அன்று காப்பு காப்பு தரித்தலுடன் திருவிழா நிறைவடைகிறது.
இத்திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று (அக்8, 2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ள பகுதிகளில், அது குறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க
Tamil News Updates December 21 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Updates December 20 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Updates December 19 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates December 18 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates December 16 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates December 15 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்