Dr Ramadoss | பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல.
நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.
செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பழனி ரோப் கார்; அடுத்த 40 நாட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு
TCS: 2026ஆம் ஆண்டிலும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் தொடரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன….
DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்….
New delhi: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலகங்களை சீன கம்யூனிஸ்ட் குழுவினர் பார்வையிட்டனர். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது….
The Raja Saab Box office : பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் 4ஆம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன….
Mutual funds: பி.பி.எஃப் மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு குறித்து பார்க்கலாம். இதில், பி.பி.எஃப் பாதுகாப்பானது, அரசு உறுதி அளிக்கும் திட்டம், ஆனால் வருமானம் குறைவாக இருக்கும். எனினும்,…
Disha Patani: நடிகர் சூர்யா பட நடிகை, பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் என்ற கிசுகிசு வெளியாகியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்