How to make navrathri special Mysore Pak | மைசூர் பாகு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இந்த மைசூர் பாகிற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு உள்ளது. அது என்னவென்றால் ஒருமுறை மைசூர் ராஜாவிற்கு இனிப்பு செய்யும் பொழுது அந்த இனிப்பில் பாகு அதிகமாக சேர்ந்து கெட்டிப் பதத்தில் ஆகிவிட்டதாம்.
உடனே அந்த சமையல்காரர் ஒரு பாத்திரத்தில் அந்த இனிப்பை ஊற்றி துண்டுகளாக்கி ராஜாவிடம் கொடுத்ததும் மிகவும் சுவையாக இருந்ததால் ராஜா இது என்ன இனிப்பு என்று சமையல்காரரிடம் கேட்க அவர் மைசூர் பாகு என்று கூறியுள்ளார். ஒரு தவறில் உண்டான இந்த இனிப்பு மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது. வெறும் மூன்றே பொருட்களை வைத்து செய்யக்கூடிய பழமையான மைசூர் பாகு வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 250 கிராம்
நெய் – 500 ml
சர்க்கரை – 500 கிராம்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடலை மாவு சேர்த்து மாவின் பச்சை வாடை நீங்கி பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வருத்தமாவினை சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் உருகிய நெய்(250g) சேர்த்து கட்டி விழாமல் நன்கு கிளறி விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை(500g), 1 ஸ்பூன் நெய் மற்றும் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். பாகுபதத்தினை கண்டறிய பாகினை இரண்டு விரல்களால் தொட்டு பார்க்கும் பொழுது ஒரு கம்பி பதம் வரவேண்டும். இதுவே சரியான பதம் ஆகும். இந்த தருணத்தில் இதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்த கலவையினை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுப்பு தீயை சிம்மில் வைத்து இந்த கலவையுடன் அவ்வப்போது சிறிதளவு நெய் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறி விட வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை 10ml நெய்யினை இதனுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். இந்த கலவை நன்கு வெந்து பொங்கி திரண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நெய் தடவிய சதுர ட்ரே அல்லது பாத்திரத்தில் சேர்த்து ஒரு கரண்டியை வைத்து சமன் செய்ய வேண்டும்.
பின்னர் இதன் மீது சிறிது சர்க்கரை தூவ வேண்டும். மைசூர் பாகு சூடாக இருக்கும் பொழுதே ஒரு கத்தியில் நெய் தடவி நீலவாக்கில் கோடு போட வேண்டும். இரண்டு மணி நேரம் ஆரிய பின்னர் மைசூர்பாகு பரிமாற தயார்.
இதையும் படிங்க
Food: அனைவருக்கும் விருப்பமான குஸ்கா பாய் வீட்டு சுவையில் இப்படி செஞ்சி அசத்துங்க. இதை பள்ளி சொல்லும் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து விடலாம்….
Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோஸ் மில்க் கேக் எளிமையான முறையில் இப்படி செஞ்சி அசத்துங்க….
Food: பெரும்பாலான மக்கள் விருந்து சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று பானி பூரி. இந்த சிறிய பூமியில் உருளைக்கிழங்கு மசாலா மட்டும் ரசம் போன்ற கலவையை சேர்த்து…
Food: சுவையான மஷ்ரூம் டிக்கா மசாலா ஹோட்டல் சுவையில் வீட்டிலே இப்படி செஞ்சு அசத்துங்க. சப்பாத்தியுடன் தொட்டுக்க சூப்பரா இருக்கும்….
Food: தர்பூசணியில் தோலை பயன்படுத்தி சுவையான அல்வா இந்த மெத்தடில் செய்து கொடுங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்