Jio AirFiber vs Airtel Xstream AirFiber | இந்தியாவின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை முறையே ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் போன்றவை வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தையில் கவர்ச்சியான சலுகைகளுடன் நுழைந்துள்ளன.
இரண்டு நிறுவனங்களுகம் வயர்லெஸ் சேவையை பயன்படுத்துவதால் பைபர் ஆப்டிக் கேபிள்களின் தேவையை நீக்குகிறது. ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ஆகிய இரண்டும் அருகிலுள்ள டவர்களில் இருந்து வயர்லெஸ் சிக்னல்களைப் பெற்று அதிவேக இணைய இணைப்பாக மாற்றி வழங்குகின்றன. கேபிள் நிறுவனங்களின் தேவை இல்லாததால் இது பயனர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.
ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள்
விலை (ரூ)
டேட்டா (ஜிபி)
சேவை நாட்கள்
வேகம் (Mbps)
599
1000
30
30 வரை
899
1000
30
100 வரை
1199
1000
30
100 வரை
ரூ. 599க்கு 30 எம்.பி.பி.எஸ். வேகம் கொண்ட 1000 ஜிபி டேட்டா வழங்குகிறது. ரூ. 899 மற்றும் ரூ. 1199 க்கான திட்டங்களில் 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்கள்
விலை (ரூ)
டேட்டா (ஜிபி)
சேவை நாட்கள்
வேகம் (Mbps)
1499
1000
30
300 வரை
2499
1000
30
500 வரை
3999
1000
30
1000 வரை (1 ஜிபிபிஎஸ்)
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டங்கள்
விலை (ரூ)
டேட்டா (ஜிபி)
சேவை நாட்கள்
வேகம் (Mbps)
699
1000
30
40 வரை
799
1000
30
100 வரை
899
1000
30
100 வரை
ஜியோ ஏர்ஃபைபர் 1 ஜிபிபிஎஸ் வேகம் வரை வழங்குகிறது.ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் 100 எம்பிபிஎஸ் வேகம் வழங்குகிறது. மாதாந்திர டேட்டா வேலிடிட்டி முடிந்த பிறகு , ஜியோ ஏர்ஃபைபர் வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைகிறது. ஏர்டெல், 2 எம்.பி.பி.எஸ். வேகமாக குறைக்கிறது.
டேட்டா லிமிட் முடிந்த பிறகு வேகத்தை அதிகரிக்க ஜியோ டேட்டா சாசெட்களை கூடுதல் வசதியாக வழங்குகிறது. ஏர்டெல் தற்போது இந்த வசதியை வழங்கவில்லை. டேட்டா தேவை மற்றும் கூடுதல் சேவைகளை பொறுத்து அவரவர் தேவைக்கு ஏற்ற வகையில் பிளானை தேர்வு செய்யலாம்.
ஓடிடி சந்தாக்கள்
ஜியோ, ஏர்டெல் இரண்டும் தங்கள் திட்டங்களுடன் கூடுதலாக ஓடிடி சந்தாக்களை வழங்குகிறது. ஜியோ நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பல தளங்கள் உட்பட பலவற்றிற்கு விரிவான பிளானை வழங்குகிறது.
அதேபோல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
Jios 365 days plan : டேட்டா இல்லாமல் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தில், 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது….
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.