Jios 365 days plan : டேட்டா இல்லாமல் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தில், 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
Jios 365 days plan : டேட்டா இல்லாமல் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தில், 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
Published on: January 28, 2025 at 5:33 pm
ரிலையன்ஸ் ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம்: அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி மூலம் மட்டுமே ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று கடந்த சில முன்பு டிராய் சில ஒழுங்குமுறை விதிகளை வழங்கி இருந்தது.
இதனால் டேட்டாவைப் பயன்படுத்தாத பயனர்கள் பயனடைய முடியும். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி வசதி மட்டுமே கிடைக்கும். இணைய வசதி கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 365 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
அந்த வகையில், ஜியோவின் இந்த திட்டம் குறிப்பாக அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை மட்டுமே பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இதில் முதல் திட்டம் ரூ.458க்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு திட்டம், ரூ.1958க்கு 365 நாட்கள் செல்லுபடி ஆகும்.
மேலும், ஜியோவின் இந்த இரண்டு திட்டங்களிலும் பயனர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
84 நாள்கள் திட்டம்
ஜியோவின் புதிய ரூ.458 திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 1000 இலவச எஸ்.எம்.எஸ்.கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயனர்கள் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
365 நாள்கள் வேலிடிட்டி திட்டம்
ஜியோவின் புதிய ரூ.1958 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் நீண்ட செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் இலவசமாக பேசலாம்.
இதனுடன், 3600 இலவச எஸ்எம்எஸ் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவையும் சேர்க்கப்பட்டு உள்ளன.
மேலும், இந்த திட்டம் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கெதி கலங்கிய ஜியோ, ஏர்டெல்: பி.எஸ்.என்.எல் ரூ.999 ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com