Reliance Jio: ஜியோவின் இந்த சிறந்த திட்டத்தில் ரூ.895க்கு ரீசார்ஜ் செய்தால் சிம் 11 மாதங்கள் முழுவதும் செயலில் இருக்கும். இந்த ரீசார்ஜ் தெரியுமா?
Reliance Jio: ஜியோவின் இந்த சிறந்த திட்டத்தில் ரூ.895க்கு ரீசார்ஜ் செய்தால் சிம் 11 மாதங்கள் முழுவதும் செயலில் இருக்கும். இந்த ரீசார்ஜ் தெரியுமா?
Published on: March 22, 2025 at 11:14 pm
ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு பிரிபேட் திட்டங்களை கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் மிக குறைந்த விலையில் வரம் பெற்ற அழைப்புகள் மற்றும் இணைய டேட்டா சலுகைகளை கொடுக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோவை பொருத்தமட்டில் பெரும்பாலான திட்டங்கள் ரூபாய் 900க்குள் கிடைக்கின்றன.
இந்தத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளன. இந்த நிலையில் ரூபாய் 895 ரீசார்ஜ் இல் 11 மாதங்களுக்கு சிம்மை ஆக்டிவ் ஆக வைத்திருக்கும் ஒரு திட்டம் குறித்து பார்க்கலாம்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் கிட்டத்தட்ட ஒரு வருட செல்லுபடி ஆகும் காலத்தை பெறுவீர்கள். அதுவும் ரூபாய் 900க்குள் குறைவான ரீசார்ஜ் தொகையிலேயே இது கிடைக்கும்.
அதாவது ஒரு நாளுக்கு இதன் செலவு ரூபாய் 2.66 மட்டுமே. அதாவது ஒரு பயனருக்கு ஆகும் செலவு ஒரு நாளுக்கு ரூபாய் மூன்றுக்குள் மட்டுமே. இந்தத் திட்டம் 336 நாட்கள் செல்லுபடியாகும்.
மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 600 sms-ல் வரை கிடைக்கும். இந்த எஸ்எம்எஸ் வசதியை 28 நாட்களுக்கு 50 இலவச எஸ் எம் எஸ் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது எஸ் எம் எஸ் திட்டமானது 28 நாட்கள் என சுழற்சி முறையில் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தில் மற்றுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் 28 நாட்களில் இரண்டு ஜிபி டேட்டா உங்களுக்கு வழங்கப்படும்.
அதாவது ஒவ்வொரு 28 நாட்களிலும் 2ஜிபி டேட்டாவை நீங்கள் பெறுவீர்கள்.
இதில் ஒரு சிக்கல் உள்ளது; இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியோ பயனர்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. அதாவது உங்களிடம் ஜியோ போன் இருந்தால் இந்த திட்டத்தை நீங்கள் ஆக்டிவ் செய்து கொள்ளலாம்.
மற்றவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது. அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் jio பயனர்கள் தங்கள் சிம் கார்டை 336 நாட்களுக்கு செயலில் வைத்திருக்க ரூபாய் 1748 ரீசார்ஜ் திட்டத்துடன் இணைய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயணங்கள் வரம் பெற்ற குரல் அழைப்பு மற்றும் 3600 sms வசதிகளை பெறுவார்கள். இது மட்டுமின்றி இந்தத் திட்டத்தில் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க வை-பை ஸ்பீடு ஆமை வேகத்தில் உள்ளதா? இந்த டிரிக்ஸ்-ஐ உடனே செய்யுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com