Delimitation Row: தொகுதி மறுசீரமைப்பால் வட மாநிலங்கள் ஆதிகம் பெறும் என்ற ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் சர்மிளா இந்த விஷயத்தில் மத்திய அரசு சொல்வது உண்மை இல்லை என்றார்.
Delimitation Row: தொகுதி மறுசீரமைப்பால் வட மாநிலங்கள் ஆதிகம் பெறும் என்ற ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் சர்மிளா இந்த விஷயத்தில் மத்திய அரசு சொல்வது உண்மை இல்லை என்றார்.
Published on: March 22, 2025 at 11:27 pm
ஹைதராபாத், மார்ச் 22. 2025: தெற்கு மாநிலங்கள் எல்லை நிர்ணய விவகாரத்தில் அரசியல் செய்வதாக மத்திய அரசு கூறிய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். சர்மிளா சனிக்கிழமை (மார்ச் 22, 2025) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இது மக்களின் உரிமைகளுக்கான போராட்டம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள்தொகை அடிப்படையில் இடங்களைப் பிரித்தால், தென் மாநிலங்கள் ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்திக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும், மேலும் தென் மாநிலங்களின் முக்கியத்துவம் குறையும் என்று அவர் கூறினார். இதற்கிடையில், எல்லை நிர்ணயம் தொடர்பான தென் மாநிலங்களின் போராட்டத்திற்கு ஆந்திர காங்கிரஸ் முழு ஆதரவளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் மௌனம் காப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு மறைமுக ஆதரவை வழங்குவதாகும் என்றார்.
தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர், தெலுங்கு தேசம் கட்சி, ஜேஎஸ்பி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லை நிர்ணயத்தை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க : தொகுதி மறுசீரமைப்பு, தென்னிந்தியா மீது தொங்கும் கத்தி: பினராய் விஜயன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com