Japan | ஜப்பானிய விமான நிலையத்தில் புதையுண்டு கிடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (செப்.2,2024) வெடித்தது.
இதனால், ஒரு ஓடுபாதையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகில் விமானம் எதுவும் இல்லை” என்று நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில், 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. அதன் திடீர் வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், டாக்ஸிவேயில் சுமார் 7 மீட்டர் (கெஜம்) விட்டமும் 1 மீட்டர் (3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டியது.
இது குறித்து, தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், “புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி விமான நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்சிவே சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழன் காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன” என்றார். மியாசாகி விமான நிலையம் 1943 இல் முன்னாள் இம்பீரியல் ஜப்பானிய கடற்படை விமானப் பயிற்சித் துறையாகக் கட்டப்பட்டது.
இது கடந்த காலத்தில் மிகப்பெரிய போர் விமான இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் வீசப்பட்ட வெடிக்காத பல குண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரினால் வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் குண்டுகள் ஜப்பானைச் சுற்றி புதைந்து கிடக்கின்றன, சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களின்போது தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
President Jharkhand Visit: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அடுத்த வாரம் 2 நாள் பயணமாக ஜார்க்கண்டிற்கு செல்ல உள்ளார்….
Achaleshwar Shiva Temple in Rajasthan : நந்தியை காக்க படையெடுத்து வந்த தேனீக்கள்; ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவ லிங்கம்.. எங்கு உள்ளது…
Gold Rate Today: தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது; சவரன் ரூபாய் 200 வரை உயர்ந்துள்ளது….
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (பிப். 06,2025) ராசிபலன்களை பார்க்கலாம். யார் யாருக்கு பணிகளில் ஆதரவு கிடைக்கும் தெரியுமா?…
Delhi Exit poll: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தள்ளதுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன….
Delhi Election 2025: அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் ஹரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு…
Tahawwur Rana in India : தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராணா, 26/11 மும்பை தாக்குதலின் முக்கிய திட்டமிடுபவரான…
Singapore President Tharman Shanmugaratnam | சிங்கப்பூர் அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் முக்கியத்தும் குறித்து பார்க்கலாம்….
South Korean Aircrash | தென் கொரிய விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் 85 பேர் பலியாகினர்….
Syria Gunfight | சிரியாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர் மேலும், 10 பேர் காயமடைந்தனர்….
Kazakhstan Air Crash | பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று இன்று (புதன்கிழமை) கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்