ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!

Rajinikanth Murattu Kaalai Re-Release: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 1980-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘முரட்டுக்காளை’ வரும் டிசம்பர் மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Published on: November 26, 2026 at 1:52 pm

சென்னை, நவ.26, 2026: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘முரட்டுக்காளை’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், 1980-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியானது. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்ற இப்படம், ரஜினிகாந்தின் அதிரடி நாயகன் என்ற அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல், ஜல்லிக்கட்டு காட்சி மற்றும் ரெயில் சண்டைக் காட்சி ஆகியவை ரசிகர்களிடம் இன்றளவும் பிரபலமாக உள்ளன.

ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த மறுவெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், ரஜினிகாந்த் நடித்த மற்றொரு வெற்றிப் படமான ‘அண்ணாமலை’ திரைப்படமும் பிறந்தநாள் சிறப்புத் திரையிடலுக்குத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டிய அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டிய அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?
Tom Hanks Praises Sachana

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ்

நடிகர் தர்ஷன் மீதான ரேணுகாசாமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அரசுத் தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ்சாட்சிகளாக மாறினர்!
Renukaswamy Murder Case

நடிகர் தர்ஷன் மீதான ரேணுகாசாமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அரசுத் தரப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com