26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி!

26/11 Mumbai Terror Attack Remembrance: 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய பாதுகாப்புப் படையினருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Published on: November 26, 2026 at 1:38 pm

புதுடெல்லி, நவ.26, 2026: கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு நாளை முன்னிட்டு, உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும், பயங்கரவாதத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய வீரர்களின் தியாகமும், தன்னலமற்ற சேவையும் இந்தியாவின் ஆன்மாவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயங்கரவாதம் மக்களின் வாழ்க்கையைச் சிதைக்கலாம்; ஆனால், துணிச்சல், மனிதநேயம் மற்றும் மன உறுதியுடன் ஒன்றிணைந்த ஒரு நாட்டின் உணர்வை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நாடு துணை நிற்பதாகக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் ஒழித்து அமைதியான, மனிதநேயம் நிறைந்த உலகை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி உறுதி

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி!
26/11 Mumbai Terror Attack Remembrance

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர்

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி உறுதி
Women's Reservation

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச தேர்தல்.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. 3 நாள்களில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு!
UP Election Seat Sharing Talks

உத்தரப் பிரதேச தேர்தல்.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. 3

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com