இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 35% வரை வரி விதிக்க அமெரிக்கா திட்டம்: சீனாவுக்கு 40% வரை வரி!

US Tariff Proposal: இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 முதல் 35 சதவீதம் வரை புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Published on: November 26, 2026 at 12:16 pm

வாஷிங்டன், நவ.26, 2026: அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் இந்தப் புதிய வரி திட்டத்தை அறிவித்துள்ளார். அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வெளிநாடுகளின் வர்த்தகக் கொள்கைகளைச் சரிசெய்து, உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வங்காளதேசம், தைவான், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் இந்த வரி நடவடிக்கையின் கீழ் இடம்பெற்றுள்ளன.

இந்தியப் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள பிரிவு 301 வரிகளைக் கணக்கில் கொண்ட பிறகு, அதிகபட்சமாக 25 சதவீதம் வரை புதிய வரி விதிக்க அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் செய்து, விசாரணையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பட்சத்தில் இந்தியாவுக்கான வரி விகிதத்தை 17 சதவீதமாக நிர்ணயிக்கவும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட உள்ளது.

தைவான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம். இந்த வரிகள் உடனடியாக அமலுக்கு வராது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 2027-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 25-ம் தேதி விசாரணைகள் தொடங்க உள்ளன. அனைத்துப் பரிசீலனைகளுக்குப் பிறகு, பிப்ரவரி மாதம் முதல் புதிய வரிகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் நிராகரித்துள்ளன. ஐரோப்பிய பொருட்களுக்கான இறக்குமதி வரி, ஏற்கனவே அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி 15 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், புதிய வரி திட்டத்திற்கான அமெரிக்காவின் காரணங்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நெதன்யாகு – ஐசன்காட் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: இஸ்ரேலில் அடுத்து என்ன நடக்கும்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com