அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டிய அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?

Tom Hanks Praises Sachana: விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தில் அவரது மகளாக நடித்த சாச்சனா நமிதாஸின் நடிப்பை ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். “அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை. என்ன ஒரு அற்புதமான நடிகை!” என்று அவர் வியந்து கூறியுள்ளார்.

Published on: November 26, 2026 at 11:50 am

சென்னை, நவ.26, 2026: விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில், விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா நமிதாஸின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியகத்தில் (LACMA) நடைபெற்ற நிகழ்ச்சியில் டாம் ஹேங்க்ஸைச் சந்தித்தபோது, அவருக்கு இந்தியத் திரைப்படங்களைப் பரிந்துரைத்துள்ளார். அப்போது ‘மகாராஜா’ திரைப்படத்தையும் பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் டாம் ஹேங்க்ஸை மீண்டும் சந்தித்தபோது, அவர் ‘மகாராஜா’ திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அப்போது சாச்சனா நமிதாஸின் நடிப்பைப் பாராட்டி, “அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை. என்ன ஒரு அற்புதமான நடிகை!” என்று கூறியதாக கவிதா குப்தா தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் விஜய் சேதுபதி ஏற்றிருந்த தந்தை கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தையும் டாம் ஹேங்க்ஸ் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக புதிய படம்.. யார் இயக்கம் தெரியுமா?

நடிகர் தர்ஷன் மீதான ரேணுகாசாமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அரசுத் தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ்சாட்சிகளாக மாறினர்!
Renukaswamy Murder Case

நடிகர் தர்ஷன் மீதான ரேணுகாசாமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அரசுத் தரப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com