திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்: தெப்பத்தில் வலம் வந்த சுவாமி

Tiruvannamalai Theppa Utsavam: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நடைபெற்ற சந்திரசேகரர் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Published on: November 26, 2026 at 11:34 am

திருவண்ணாமலை, நவ.26, 2026: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. கோவிலுக்கு அருகிலுள்ள அய்யங்குளத்தில் நடைபெற்ற இந்த உற்சவத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் எழுந்தருளினார். பின்னர் திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம், கோவிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் கடந்த நவம்பர் 24-ம் தேதி மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது. இதையொட்டி கார்த்திகை பவுர்ணமி கிரிவலம் செல்லவும், மகா தீபத்தை தரிசிக்கவும் நவம்பர் 23-ம் தேதி இரவு முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத் தொடங்கினர்.

மகா தீபத் திருநாளில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று பகலில் அவ்வப்போது மழை பெய்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் குடை மற்றும் மழைக்கோட்டுடன் பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன்படி, இன்று (நவம்பர் 26) இரவு பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை (நவம்பர் 27) சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளன. நாளை மறுநாள் (நவம்பர் 28) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது.

இதையும் படிங்க: சபரிமலையில் சுகாதாரமற்ற கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.. அதிரடி நடவடிக்கை!

சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்துகள்.. முழு விவரம்!
Sabarimala Pilgrims Bus Service

சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்துகள்.. முழு

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!
Hethai Amman Festival Celebration

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com