Textile Industry Development: தமிழகத்தின் ஜவுளித் தொழிலை மேம்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
Textile Industry Development: தமிழகத்தின் ஜவுளித் தொழிலை மேம்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Published on: November 25, 2026 at 4:56 pm
சென்னை, நவ.25, 2026: தமிழகத்தின் ஜவுளித் தொழிலை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது விருதுநகரில் அமைக்கப்பட்டு வரும் பி.எம். மித்ரா (PM MITRA) ஜவுளிப் பூங்காவின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
மேலும், காஞ்சிபுரம் பட்டு ரகங்களைப் பல்வேறு புதிய வடிவங்களில் தயாரிப்பது, நெசவாளர்களின் வருமானத்தை அதிகரிப்பது, நவீன வகை நூலிழைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காஞ்சிபுரம் ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் வெற்றியை மற்ற ஜவுளித் துறைகளிலும் விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு மேம்பட்ட வசதிகள், புதிய வாய்ப்புகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : கனடா லாட்டரில் ரூ.30 கோடி பரிசு.. மலையாள அம்மணிக்கு அதிர்ஷ்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com