அரிசி ஏற்றுமதிக்கு 30% வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை.. உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

Non-Basmati Rice Export Duty: இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Published on: November 24, 2026 at 2:31 pm

சென்னை, நவ.24, 2026: இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான நடவடிக்கை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அரிசி ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு அரிசி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டுச் சந்தையில் போதிய அளவு அரிசி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அரிசி ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், முதல் கட்டமாக ஏற்றுமதி வரி மற்றும் குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை சுமார் 14 மாதங்கள் நீடித்தது. ஆனால், தற்போது பரிசீலிக்கப்படும் கட்டுப்பாடுகள் தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : கார்த்திகை தீபம் எதிரொலி.. மதுரையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com