மீண்டும் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்.. ரூ.5,000 நிவாரணம் வழங்க கோரிக்கை!

Thoothukudi Fishermen Relief Demand: புயல் காரணமாக 10 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்றார்கள்; ரூ.5,000 நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Published on: November 24, 2026 at 11:30 am

தூத்துக்குடி, நவ.24, 2026: தூத்துக்குடியில் புயல் காரணமாக 10 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள், மீண்டும் தங்களது மீன்பிடித் தொழிலைத் தொடங்கியுள்ளனர். இதன்படி, திங்கள்கிழமை அதிகாலை 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்றன.

வங்கக்கடலில் அக்வான் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, நவம்பர் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், விசைப்படகு மீனவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு தற்போது கடலுக்குச் சென்றுள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை கடல் சீற்றம் மற்றும் புயல் காரணமாக மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் 17 நாட்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, பருவமழை காலத்தில் வாழ்வாதாரத்தைச் சமாளிக்க நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு கூடுதலாக ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் நேரடியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், மறைமுகமாக 10 ஆயிரம் பேரும் மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளனர்.

இதையும் படிங்க : கார்த்திகை தீப விவகாரம்.. தமிழக அரசுக்கு விஎச்பி கண்டனம்; மறுஆய்வு மனுவை திரும்பப் பெற கோரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com