கர்நாடகாவில் பரபரப்பு.. YS ராஜசேகர ரெட்டி மகள் தடுத்து நிறுத்தம்!

YS Sharmila Stopped by Police: பெங்களூரு யெலஹங்கா அரண்மனைக்குச் செல்ல Y.S. ஷர்மிளாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது; விமான நிலையத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: November 23, 2026 at 5:16 pm

பெங்களூரு, நவ.23, 2026: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, தனது தாயார் ஒய்.எஸ். விஜயலட்சுமியுடன் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா அரண்மனைக்குச் செல்ல முயன்றபோது கர்நாடக போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது சகோதரரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தினர் வசித்து வரும் இந்தச் சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்டகாலமாகப் பிரச்சினை நிலவி வருகிறது.

யெலஹங்கா அரண்மனைக்குள் ஷர்மிளா, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் நுழையக் கூடாது என்று பெங்களூரு தேவனஹள்ளி நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்தின் குத்தகை மற்றும் உடைமை உரிமை தொடர்பாக சிலிக்கான் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு வந்த ஷர்மிளாவையும் அவரது தாயாரையும் விமான நிலையத்திலிருந்து யெலஹங்கா செல்லும் வழியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். குடும்பச் சொத்தான வீட்டுக்குச் செல்ல தங்களுக்கு என்ன தடை என்று போலீஸாரிடம் ஷர்மிளா கேள்வி எழுப்பினார். நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி போலீஸார் அனுமதி மறுத்ததால், அவர் அருகிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்றார்.

ஷர்மிளாவின் மகள் அஞ்சிலி ரெட்டியின் திருமணம் நவம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக யெலஹங்கா அரண்மனையில் திருமணத்தை நடத்த ஷர்மிளா திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களைக் குறிப்பிட்டு ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்ததால், திருமண இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக ஷர்மிளா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இருப்பினும், திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் மற்றும் ஏற்பாடுகளுக்காக அரண்மனைக்குச் செல்ல ஷர்மிளா திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சொத்து தங்களது குடும்பத்தின் பூர்வீகச் சொத்து என்றும், அதில் தனக்குப் பங்கு இருப்பதாகவும் ஷர்மிளா கூறி வருகிறார். இதற்கிடையே, நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு டிசம்பர் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டுக்குச் சென்று சிலர் இந்தியாவை அவமதிக்கிறார்கள்.. ராகுல் குறித்து நிதின் நபின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com