Rain Alert: நவ. 24-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Rain Alert: நவ. 24-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published on: November 22, 2026 at 3:39 pm
சென்னை, நவ.22, 2026: தமிழகத்தில் நவம்பர் 23 முதல் 26-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நவம்பர் 24-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23-ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 25-ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும், நவம்பர் 26-ஆம் தேதி கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நவம்பர் 23 முதல் 26-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்… 1.30 கோடி குடும்பங்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com