Navoriya Movie Release: டிசம்பரில் வெளியாகிறது விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படம்.
Navoriya Movie Release: டிசம்பரில் வெளியாகிறது விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படம்.

Published on: November 20, 2026 at 11:09 am
சென்னை, நவ.20, 2026: இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படம் ‘நவோரியா’ வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தி கேம் ஃபார் லைஃப்’ (The Game for Life) என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. விமல் மற்றும் சிம்புதேவன் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதில் நடிகை ஆன் ஷீத்தல் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பாலா சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க, எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டி.பி.சி. ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைத் தயாரித்துள்ளார். விமலின் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக ‘நவோரியா’ கூறப்படுகிறது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சரியான வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க : தனுஷின் ஓ.ம் திரைப்பட சிக்கலுக்கு தீர்வு.. படம் திட்டமிட்டப்படி ரிலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com