மு.க.ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மரணம்!

VS Babu Death: கொளத்தூர் தொகுதியில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

Published on: November 19, 2026 at 6:01 pm

சென்னை, நவ.19, 2026: சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு இன்று (நவம்பர் 19) பிற்பகல் காலமானார். நீண்டகால சுவாசக் கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சுமார் 70 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து மாரடைப்பு ஏற்பட்டு அவர் இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் திமுகவில் இருந்த வி.எஸ்.பாபு, 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வி.எஸ்.பாபுவின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுடன் கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி பயணம்…16 கி.மீ. பிரமாண்ட ரோடுஷோ!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com