முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி பயணம்…16 கி.மீ. பிரமாண்ட ரோடுஷோ!

Trichy Roadshow: தமிழக முதலமைச்சர் விஜய் நாளை திருச்சிக்கு வருகை தருகிறார். இதையொட்டி சுமார் 16 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட ரோடுஷோ நடைபெற உள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

Published on: November 19, 2026 at 3:50 pm

திருச்சி, நவ.19, 2026: தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (நவம்பர் 20, வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் வேனில் சாலை மார்க்கமாக புத்தூர் பகுதியில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்.

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.134 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இந்தக் கட்டடத்தில் 600 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, பச்சிளம் குழந்தைகள் வார்டுக்குச் சென்று, தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவிக்கிறார்.

இதையடுத்து, காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அரசு ஓட்டலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார்.

முதலமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையத்திலிருந்து புத்தூர் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து அரசு விழா நடைபெறும் தமிழ்நாடு ஓட்டலுக்கும் செல்லும் வழித்தடங்களில் சுமார் 16 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட ரோடுஷோ நடைபெறுகிறது. இதற்காகப் பல்வேறு இடங்களில் சாலையோரத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் விவகாரம்.. தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com