தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் முழுமையாக மீட்பு!

Tanishq Jewellery Robbery Case: தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன.

Published on: November 18, 2026 at 11:21 am

மதுரை, நவ.18, 2026: தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், கொள்ளையடிக்கப்பட்ட 1.139 கிலோ நகைகளையும் போலீசார் முழுமையாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 11-12ஆம் தேதி இரவு நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், சுமார் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் இருப்புப் பதிவுகளை ஆய்வு செய்ததில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.15 கோடி என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கொள்ளை தொடர்பாக முக்கியக் குற்றவாளியான நிஷாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி ஆகியோரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் செல்போன் அழைப்புகள் ஆய்வு மூலம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டன.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அவற்றை மீட்டுள்ளனர். இதன் மூலம் 11.384 கிலோ நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. கடன்களை அடைப்பதும் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் கொள்ளைக்கான முக்கிய காரணங்களாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் செயல்படாதது, சிசிடிவி கண்காணிப்பில் குறைபாடுகள் இருந்தது உள்ளிட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்தும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : சப்-இன்ஸ்பெக்டர் தாயிடம் 15 பவுன் நகை பறிப்பு; பி.எச்.டி. மாணவர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com