Rahul Gandhi: தனது பெற்றோரான ராஜிவ்- சோனியா முதன்முறையாக சந்தித்துக்கொண்ட உணவகத்துக்கு காதலியுடன் சென்றுள்ளார் ராகுல் காந்தி.
Rahul Gandhi: தனது பெற்றோரான ராஜிவ்- சோனியா முதன்முறையாக சந்தித்துக்கொண்ட உணவகத்துக்கு காதலியுடன் சென்றுள்ளார் ராகுல் காந்தி.

Published on: November 17, 2026 at 11:14 am
புதுடெல்லி, நவ.17, 2026: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ புத்தக வெளியீட்டு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது பெற்றோர் ராஜீவ் காந்தி – சோனியா காந்தி சந்தித்துக் கொண்டது தொடர்பான சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
தனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்துக் கொண்டது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள ‘வார்சிட்டி’ (Varsity) உணவகத்தில்தான் என்பதை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி, பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் கேம்பிரிட்ஜ் சென்றபோது தனது காதலியையும் அதே உணவகத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
அங்கு சென்றதும், தனது பெற்றோர் அந்த உணவகத்தில்தான் சந்தித்துக் கொண்டதாக ஊழியரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த ஊழியர், “ஓ, அந்த இருவரையுமா? எனக்கு அவர்களைத் தெரியும்” என்று பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்ததாக ராகுல் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, உணவகத்தில் சிக்கன் உணவு ஆர்டர் செய்ததாகவும், ஆனால் அதன் சுவை மிகவும் மோசமாக இருந்ததாகவும் நகைச்சுவையாகக் கூறினார். காதலில் விழ விரும்புபவர்கள் அந்த உணவகத்துக்குச் செல்லலாம்; ஆனால் அங்கு சிக்கன் உணவை மட்டும் சாப்பிட வேண்டாம் என்று ராகுல் கூறியது நிகழ்ச்சியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்; வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.. பிரதமர் மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com