Tirupati Sesha Vahana Procession: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாகுல சவிதியை முன்னிட்டு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tirupati Sesha Vahana Procession: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாகுல சவிதியை முன்னிட்டு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Published on: November 14, 2026 at 8:39 pm
திருமலை, நவ. 14, 2026 : திருப்பதி திருமலையில் நாகுல சவிதி புனித நாளை முன்னிட்டு நேற்று (நவம்பர் 13) இரவு ஏழு தலைகளைக் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கம் மற்றும் வைர நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து, சுவாமி நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து, ‘கோவிந்தா… கோவிந்தா…’ என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இந்த வாகன வீதிஉலாவில் திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை செயல் அதிகாரி டாக்டர் ஏ. சரத், கோவில் துணை செயல் அதிகாரி பாஸ்கர், விஜிலென்ஸ் அதிகாரி சுரேந்திரா, பேஷ்கார் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகுல சவிதியை முன்னிட்டு நடைபெற்ற இந்த பெரிய சேஷ வாகன சேவை திருமலையில் பக்தி மயமான சூழலை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு.. தேவசம்போர்டு திட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com