எஸ்ஐஆர் நீக்கத்துக்குப் பிறகு தமிழகத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு.. முழு விவரம்!

Tamil Nadu Voter Addition: எஸ்ஐஆர் நீக்கத்துக்குப் பிறகு தமிழகத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Published on: November 13, 2026 at 11:35 am

சென்னை, நவ.13, 2026: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிக்குப் பிறகு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மட்டும் சுமார் 4 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

வியாழக்கிழமை (நவ.12) வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 5,77,46,618 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.95 கோடி பேர் பெண்கள், 2.82 கோடி பேர் ஆண்கள். மூன்றாம் பாலினத்தவர் 7,892 பேர் உள்ளனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை, 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சென்னையில் 29.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 32.39 லட்சம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 23.26 லட்சம் பேரும் உள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 5.58 லட்சம் வாக்காளர்களும், சென்னை துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1.20 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்காக நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும், voters.eci.gov.in இணையதளம் அல்லது ECINET செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழகத்தில் 15,000 போலீஸாரை புதிதாக நியமிக்க திட்டம்.. முதல்வர் விஜய் ஆலோசனை!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன்!
DMK MLA Summoned by Police

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com