National Banana Research Institute : திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
National Banana Research Institute : திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Published on: November 12, 2026 at 1:57 pm
சென்னை, நவ.12, 2026: திருச்சியில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் இயங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) முதுநிலை திட்ட உதவியாளர் (Senior Project Assistant) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதில், ஒரு காலியிடத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பி.இ., பி.டெக். அல்லது எம்.எஸ்சி. (கணினி அறிவியல், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்புவோர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 18, 2026 ஆகும்.
இதையும் படிங்க :CSIR-ல் 2027 ஜனவரி மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com