வேலூரில் பாமக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. 10 முறை சுட்டதால் அதிர்ச்சி!

Vellore Shooting Case: வேலூரில் பாமக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

Published on: November 10, 2026 at 12:41 pm

Updated on: November 10, 2026 at 12:42 pm

வேலூர், நவ.10, 2026: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சேங்குன்றம் கிராமத்தில் பாமக பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகரும் விவசாயியுமான ஞானவேல் (43) என்பவருக்கும், பூவரசன் (28) என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கிராமப் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த ஞானவேலை அங்கு வந்த பூவரசன் நாட்டுத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ஞானவேல் மீது 10 முறை துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் ஞானவேலுடன் இருந்த ரகு (40) என்பவரின் வலது கையிலும் குண்டு பாய்ந்தது. இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஞானவேலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ரகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய பூவரசன் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 13 குற்ற வழக்குகள் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ.க்கள்.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை திட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com