மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு கனிமொழி கண்டனம்!

Kanimozhi Slams TVK MLA: மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 10, 2026 at 12:06 pm

சென்னை, நவ.10, 2026: மாவட்ட ஆட்சியருக்கு, தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், மதுபோதையில் நள்ளிரவில் ஆட்சியரின் வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்துக்குத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக எம்.எல்.ஏ ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

மேலும், தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டுமே ஆட்சியருக்குப் பாதுகாப்பு அளித்துவிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : சீமான் எனும் காமெடி சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும்.. மாணிக்கம் தாகூர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com