Balaji Murugadoss House Raid: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர்.
Balaji Murugadoss House Raid: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர்.

Published on: November 9, 2026 at 1:40 pm
சென்னை, நவ.9, 2026: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு சுமார் 15 போலீசார் வந்ததாகக் குறிப்பிட்டுள்ள பாலாஜி முருகதாஸ், யார் அளித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், ரத்தப் பரிசோதனைக்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் மூன்று பூனைகள், ஒரு நாய் மட்டுமே இருப்பதாகக் கூறிய அவர், சோதனை நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் தன்னிடம் ஒத்துழைப்பு கேட்டதாகவும், தான் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் பாலாஜி முருகதாஸ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ‘மூக்குத்தி அம்மன் 2’ வசூல் அதிகரிப்பு.. 2 நாட்களில் ரூ.4.33 கோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com