இந்தியாவின் முதல் ஏ.ஐ ஊழல்.. டிஜிட்டல் கரையான்.. தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!

Periyar Arivulagam AI Corruption: பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஏஐ ஊழல் என அமைச்சர் ராஜ்மோகன் இதனை வர்ணித்தார்.

Published on: November 7, 2026 at 6:33 pm

சென்னை, நவ.7, 2026: கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை இந்தியாவிலேயே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற முதல் பெரிய ஊழல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், மார்ச் 14ஆம் தேதி அதற்கான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று பதிப்பகங்களை நடத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், புத்தகங்களில் போலி எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட நூலகங்களுக்கும் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை நடத்தும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் சிறப்புக் குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்.. ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com