Coromandel Profit Decline: மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலியாக, கோரமண்டல் நிறுவன லாபம் 34% சரிவு கண்டுள்ளது.
Coromandel Profit Decline: மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலியாக, கோரமண்டல் நிறுவன லாபம் 34% சரிவு கண்டுள்ளது.

Published on: November 7, 2026 at 4:19 pm
சென்னை, நவ.7, 2026: கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனம், 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 34 சதவீதம் சரிந்து ரூ.523.37 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.793.44 கோடியாக இருந்தது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியால் உர உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததே லாபச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப அரசின் மானியம் இல்லாததால் உர வணிகத்தின் லாப வரம்பு பாதிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நிறுவனத்தின் மொத்த வருவாய் 7 சதவீதம் உயர்ந்து ரூ.10,294.13 கோடியாக உள்ளது. ஆனால், செலவுகள் 11 சதவீதம் அதிகரித்து ரூ.9,642 கோடியாக உயர்ந்துள்ளன. போதிய மழையின்மை, இடுபொருட்களின் விலை உயர்வு மற்றும் குறைந்த ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களும் உர விற்பனையைப் பாதித்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
அதேநேரத்தில், பயிர் பாதுகாப்புப் பிரிவின் வருவாய் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், புதிய என்.பி.கே. உர உற்பத்தித் திறனை 2027 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், பயிர் பாதுகாப்புப் பிரிவில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : 2026-ல் அதிக வருவாய் தந்த 5 மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்.. முதலிடத்தில் ஹெச்.எஸ்.பி.சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com