Sellur Raju CCB Visit: மதுரை சிசிபி அலுவலகம் சென்ற செல்லூர் ராஜு-வால் பரபரப்பு ஏற்பட்டது.
Sellur Raju CCB Visit: மதுரை சிசிபி அலுவலகம் சென்ற செல்லூர் ராஜு-வால் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: November 7, 2026 at 3:56 pm
மதுரை, நவ.7, 2026: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கட்சி நிர்வாகிகளுடன் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அலுவலகத்திற்குச் சென்று, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனைச் சந்தித்தார். அவரிடம் போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர்.
தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றது. சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அரசுக்கு எதிராக வாக்களிக்க, தமக்கு ரூ.15 கோடி தருவதாக அதிமுக நிர்வாகிகள் பேரம் பேசியதாக முஸ்தபா குற்றம்சாட்டியிருந்தார்.
மன்னனைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, மன்னனும் முஸ்தபாவும் நீண்டகால நண்பர்கள் என்றும், இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலைத் தவறாகப் புரிந்துகொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், மன்னனுக்கு ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை அதிகாலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றது ஏன் என்றும் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஆற்று மணல் குவாரி முறைகேடு புகார்.. தி.மு.க துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com