கவின் ஆணவக் கொலை வழக்கு.. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

SC Rejects TN Appeal in Kavin Case : கவின் ஆணவக் கொலை வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published on: November 5, 2026 at 4:47 pm

புதுடெல்லி, நவ.5, 2026: திருநெல்வேலி கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியான சுஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் செல்வகணேஷ், கடந்த 2025 ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் சுஜித் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சுஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. ஆனால், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, மதுரை உயர் நீதிமன்றக் கிளை கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றக் கோரிய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு கவின் கொலை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை.. தொல். திருமாவளவன்!

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!
Deepika Raja

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com