ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள்.. நவம்பர் 5 முதல் தமிழக அரசு சிறப்புத் திட்டம்!

10 Vegetables for ₹100 Scheme: ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டம், நவம்பர் 5 முதல் அமலுக்கு வருகிறது.

Published on: November 4, 2026 at 4:36 pm

சென்னை, நவ.4, 2026: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 10 வகையான காய்கறிகள் அடங்கிய ஒரு தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தச் சிறப்பு விற்பனை நவம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமும், சென்னையில் நான்கு நடமாடும் காய்கறிக் கடைகள் மூலமும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தத் தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேங்காய் ஆகிய 10 வகையான காய்கறிகள் இடம்பெறும். ஒவ்வொரு காய்கறிக்கும் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும், ஒரு தொகுப்புக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி காலத்தில் பொதுமக்களின் அன்றாடச் சமையல் செலவைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க : ரூ.1,000 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்.. தோனியிடம் முதலீட்டாளர்கள் கற்க வேண்டிய பாடங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com