125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு கார்கள் வழங்க முடிவு.. திமுக, இடதுசாரிகள் புறக்கணிப்பு!

Cars for 125 Tamil Nadu MLAs: தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, தொகுதிகளுக்குள் பயணம் செய்வதற்காக விருப்பம் தெரிவித்துள்ள 125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட உள்ளன.

Published on: November 4, 2026 at 4:09 pm

சென்னை, நவ.4, 2026: தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, தொகுதிகளுக்குள் பயணம் செய்வதற்காக விருப்பம் தெரிவித்துள்ள 125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், இதில் சிலர் இத்திட்டத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அரசு வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பங்கேற்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், பாமகவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அரசு கார் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏக்கும் தலா ரூ.15 லட்சம் வரையிலான மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கார்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் ஊதியம், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், தனிப்பட்ட உதவியாளர் செலவுகளுக்காக மாதம் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 20 ஆண்டுகால சொத்துக் குவிப்பு வழக்கு.. அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com