Rahul Gandhi Questions Modi: “தேசவிரோதிகள் யார்?” பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
Rahul Gandhi Questions Modi: “தேசவிரோதிகள் யார்?” பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: November 4, 2026 at 4:01 pm
புதுடெல்லி, நவ.4, 2026: எதிர்க்கட்சிகள் தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், இதுகுறித்து தன்னுடன் நேரடி விவாதம் நடத்தத் தயாரா என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். எந்த இடத்திலும், எந்த மேடையிலும் விவாதிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் தேசவிரோதிகள் என்றால் யார் தேசவிரோதி, வெளிநாட்டு சக்திகளுடன் யாருக்கு தொடர்பு உள்ளது, அந்தத் தொடர்புகளின் தன்மை என்ன என்பது குறித்து விவாதிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டு உதவியுடன் பிரதமர் மோடி பதவிக்கு வந்ததாகவும், தொடர்ந்து பதவியில் நீடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு பதில்
ராகுல் காந்தியின் சவாலுக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவரது கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மதச்சார்பின்மை குறித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பேசுவது போலவும், பிரிவினைவாதிகள் இந்தியக் கொடியை ஏந்துவது போலவும், அராஜகவாதிகள் அரசியலமைப்பைக் கையில் வைத்திருப்பது போலவும் ராகுலின் சவால் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் எதிரிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளித்துவிட்டு, மற்றவர்கள் வெளிநாட்டு ஆதரவு பெறுவதாகக் குற்றம்சாட்டுவது கேலிக்குரியது என்றும் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உயர்மட்ட விவாதங்கள் முதிர்ச்சியுள்ள தலைவர்களுக்கு இடையேதான் நடைபெறும் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் பாஜக – காங்கிரஸ் இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க : 12ஆம் வகுப்பு மாணவன் கொலை.. இளம்பெண் உள்பட 3 பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com