Private Bar Rules: டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் தனியார் பார்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Private Bar Rules: டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் தனியார் பார்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Published on: November 2, 2026 at 8:24 pm
சென்னை, நவ.2, 2026: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனியாருக்கு மதுபானக் கடைகளை நடத்த அனுமதி அளிக்கும் வகையில் புதிய திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழக மதுபான சில்லறை விற்பனை விதிகள், 2003-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் 23-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, தனியார் நடத்தும் பார்களுக்கு மாவட்ட அளவில் அனுமதி வழங்குதல் மற்றும் ஒவ்வொரு கடை, பாருக்கும் தனித்தனியாக அங்கீகாரம் பெறுதல் போன்ற நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், பார்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தனி ஆய்வு நடைமுறை, தினசரி விற்பனை விவரங்களை மின்னணு முறையில் பராமரித்தல், குடிநீர் மற்றும் கை கழுவும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அனுமதி விவரங்கள் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைப் பலகைகளையும் வைக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளும் பார்களும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும், அவர்கள் பார்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களிலும் மதுபான விற்பனைக்குத் தடை தொடரும்.
இதையும் படிங்க : டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பார்கள்.. தமிழ்நாடு அரசு அனுமதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com