டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்!

International Tammer Boxing: பின்லாந்தில் நடைபெற்ற 46-வது சர்வதேச டாம்மர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆர்த்தி தாரியல், அங்குஷிதா போரா, அருந்ததி சௌத்ரி, பவன் பர்த்வால் ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

Published on: November 2, 2026 at 8:09 pm

டாம்பெரே, நவ. 2 2026: பின்லாந்தில் நடைபெற்ற 46-வது சர்வதேச டாம்மர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 14 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதன்மூலம் ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி நிறைவடைந்த இந்தப் போட்டி பின்லாந்தின் டாம்பெரே நகரில் நடைபெற்றது.

மகளிர் 54 கிலோ எடைப்பிரிவில் ஆர்த்தி தாரியல், 65 கிலோ எடைப்பிரிவில் அங்குஷிதா போரா, 70 கிலோ எடைப்பிரிவில் அருந்ததி சௌத்ரி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் பவன் பர்த்வாலும் தங்கம் வென்று இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கையை நான்காக உயர்த்தினார்.

வெள்ளிப் பதக்கங்களைப் பொறுத்தவரை, ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் முகமது ஹுசாமுதீனும், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மினும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர். மேலும், ஆடவர் பிரிவில் விவேக் மீனா (65 கிலோ), ஹிதேஷ் (70 கிலோ), அக்ஷய் (80 கிலோ), போபின் சௌஹான் (90 கிலோ), சேத்தன் சௌத்ரி (90 கிலோவுக்கு மேல்) ஆகியோரும், மகளிர் பிரிவில் தனு (51 கிலோ), திஷா பாட்டீல் (60 கிலோ), இம்ரோஸ் கான் (75 கிலோ) ஆகியோரும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

1977ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் டாம்மர் குத்துச்சண்டை போட்டி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மலேசியாவை வீழ்த்தி இந்தியா 4வது வெற்றி! ஆசிய ஹாக்கி தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com