Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Published on: November 1, 2026 at 8:28 pm
சென்னை, நவ.1, 2026: நடிகை சாய் பல்லவி, நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ளார். இந்நிலையில், சீதை கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா குரோர்பதி’யில் அமிதாப் பச்சனுடன் உரையாடும்போது தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சீதை போன்ற போற்றப்படும் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், அந்தக் கதாபாத்திரத்தை கண்ணியத்துடன் திரையில் கொண்டுவர வேண்டுமெனத் தொடர்ந்து பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபட்டதாகவும் சாய் பல்லவி தெரிவித்தார். மேலும், படப்பிடிப்பின்போது எந்தவிதமான தடைகளும் ஏற்படக்கூடாது என இறைவனிடம் வேண்டியதாகக் குறிப்பிட்டார்.
தியானம் செய்வது மனதை அமைதியாக வைத்திருக்க உதவியதாகக் கூறிய அவர், மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் உடனடியாக எதிர்வினையாற்றாமல், அந்தச் சூழலைப் பொறுமையாகக் கவனிக்க வேண்டும் என்பதை சீதை கதாபாத்திரத்தின் மூலம் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். இதுபோன்ற நேரங்களில் சீதை எப்படி நடந்துகொண்டிருப்பார் என்று சிந்தித்ததாகவும் கூறினார்.
மேலும், ‘ராமாயணம்’ திரைப்படம் வெறும் சினிமா அனுபவமாக மட்டுமின்றி, வருங்காலத் தலைமுறையினரும் பார்க்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com