Varalaxmi Sarathkumar: மேகமூட்டத்தால் நிலவைப் பார்க்க முடியவில்லை என்ற நிலையில், மனைவிக்காக நிலவையே வரைந்துள்ளார் வரலட்சுமி கணவர்!
Varalaxmi Sarathkumar: மேகமூட்டத்தால் நிலவைப் பார்க்க முடியவில்லை என்ற நிலையில், மனைவிக்காக நிலவையே வரைந்துள்ளார் வரலட்சுமி கணவர்!

Published on: October 31, 2026 at 1:52 pm
மும்பை, அக்.31, 2026: நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாய் சச்தேவுடன் முதல் கர்வா சௌத் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின்போது, மேகமூட்டம் காரணமாக நிலவைப் பார்க்க முடியாமல் இருவரும் சிரமப்பட்டுள்ளனர்.
வடஇந்தியாவில் திருமணமான பெண்கள் தங்களது கணவரின் நீண்ட ஆயுளுக்காகக் கடைப்பிடிக்கும் பாரம்பரிய விரதமே கர்வா சௌத். இந்த விரதத்தின்போது நிலவைப் பார்த்து வழிபட்ட பின்னரே பெண்கள் உணவு மற்றும் தண்ணீர் அருந்தி விரதத்தை முடிப்பது வழக்கம்.
ஆனால், அன்று வானில் மேகங்கள் சூழ்ந்திருந்ததால் நிலவைப் பார்க்க முடியவில்லை. இதையடுத்து, வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய், தனது மனைவி விரதத்தை முடிப்பதற்காக நிலவின் உருவத்தைத் தாளில் வரைந்து கொடுத்துள்ளார். பின்னர் அவருக்கு உணவளித்து விரதத்தை முடிக்க உதவியுள்ளார்.
இந்த அழகான தருணங்களை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அதில், மேகங்களுக்குப் பின்னால் நிலவு ஒளிந்து விளையாடியதாகவும், ஒரு கட்டத்தில் தனது கணவரே நிலவை வரைந்துவிட்டதாகவும் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க : ராமாயணம் முன்பதிவிலேயே ரூ.17 கோடி வசூல்.. 3.33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com